சசிகலா ஆதரவு எம்எல்ஏ தொகுதிக்குள் வர தடை: கொதித்தெழுந்த மக்கள்!

சசிகலா ஆதரவு எம்எல்ஏ தொகுதிக்குள் வர தடை: கொதித்தெழுந்த மக்கள்!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (11:19 IST)
அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் பல எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் போக வாய்ப்புள்ளதால் அவர்களை நட்சத்திர விடுதியில் சிறைவைத்துள்ளார் சசிகலா. இதனையடுத்து பலரும் தங்கள் தொகுதி எம்எல்ஏக்களுக்கு ஃபோன் செய்து ஓபிஎஸுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

 
 
இந்நிலையில் அதிமுக தனியரசு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதால் அவருக்கு தொகுதிக்குள் வர தடை விதித்துள்ளனர் அந்த தொகுதி மக்கள். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருக்கிறார் தனியரசு.
 
தற்போது சொகுசு விடுதியில் இருக்கும் தனியரசு சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதால் அந்த தொகுதி மக்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ஒரு பதிவை பரப்பி வருகின்றனர்.


 
 
அதில், காங்கேயம் எல்எல்ஏ தனியரசுக்கு, நாங்கள் ஜெயலலிதாவுக்காக, அவரது ஆட்சிக்காக மட்டுமே உங்களுக்கு ஓட்டு போட்டோம். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப்பின் தார்மீக அடிப்படையில், எம்எல்ஏ தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிகிறோம்.
 
வாக்களித்த எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒருவரை தேர்வு செய்ய நீங்கள் யார்? ஆகவே உங்கள் பதவியை உடனே ராஜினாமா செய்துவிடுங்கள்; தொகுதிக்குள் காங்கேயம் தொகுதிக்குள் வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :