Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னும் 2 நாட்களில் சசிகலா கதை முடிந்துவிடும்: அதிர்சியில் மன்னார்குடி குரூப்!

இன்னும் 2 நாட்களில் சசிகலா கதை முடிந்துவிடும்: அதிர்சியில் மன்னார்குடி குரூப்!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:59 IST)

Widgets Magazine

தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்துவிடும் என பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.


 
 
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அவரது அணியில் பலரும் சேர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து தனது ஆதரவை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், அதிமுக தற்போது ரௌடிகளின் அராஜகமாக மாறியுள்ளது என்றார்.
 
அப்போது மதுசூதனனை வரவேற்று பேசிய முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஓபிஎஸ் மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளார். அதிமுக அவைத் தலைவர், பொருளாளர் என அதிமுக பெட்டகமே இங்கிருக்கிறது. சசிகலா ஒன்றுமில்லை என தெரிவித்தார். சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என்றும் பிஎச்.பாண்டியன் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக அவைத் ...

news

ஓ.பி.எஸ்.க்கு 5 மணி சசிகலாவுக்கு 7.30 மணி: ஆளுநர் சந்திப்பு

இன்று பிற்பகல் சென்னை வரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ...

news

அதிமுக வங்கி கணக்கு மூடல் குறித்து அதிகாரிகள் பரிசீலனை!!

அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி அதிமுக பொருளாளரும், முதல்வருமான ஓ.பன்னீர் ...

news

எம்.எல்.ஏ.க்களுடன் பன்னீர் தரப்பு பேச்சு வார்த்தை: தடுத்து நிறுத்த கார்டன் தரப்பு தீவிரம்

22 எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை ஓ.பன்னீர்செல்வம்-நத்தம் விஸ்வநாதன் மகன்கள் ...

Widgets Magazine Widgets Magazine