Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாட்டு பாடிய சசிகலா!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாட்டு பாடிய சசிகலா!


Caston| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (13:20 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய வைத்தார்கள் என நேற்று இரவு செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். இதனையடுத்து தமிழகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது.

 
 
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால் கனிசமான எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்திற்கு வரவில்லை என்ற தகவலும் வருகிறது.
 
இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பாட்டு பாடியதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதிமுக எம்எல்ஏக்களை கட்டாயபடுத்தி யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை என சசிகலா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :