வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (18:12 IST)

4 ஆண்டுகள் தேவையில்லை; சசிகலா முன்பே விடுதலை அடையலாம் - சிறை சட்டத்தில் சலுகை

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில சலுகைகள் மூலம் அவர் முன்பே விடுதலையாகும் வாய்ப்பிருக்கிறது...


 

 
அதாவது, சிறையில் இருக்கும் காலத்தில் அவர் ஒரு கைத்தொழிலை செய்தால், அதன் அடிப்படையில், மாதம் 6 நாட்கள் சலுகை அளிக்கும் அதிகாரம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. அதேபோல், தண்டனைக் காலத்தில் அவர் நடந்துகொள்ளும் நன்னடத்தைக்கு மாதம் 6 நாட்கள் சலுகை அதிகாரம் அதிகாரிகளுக்கு உண்டு, இதுபோக, நன்னடத்தையை காரணம் காட்டி, ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 20 நாட்களுக்கு சிறப்பு சிறை நேரம் என்ற ஒன்றும் வழங்கப்படும்.
 
இதுவெல்லாம் நடந்தால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்கு வருட சிறை வாழ்க்கையில், மூன்றில் ஒரு பங்கு மட்டும் அனுபவித்தாலே போதும் என சிறை சட்டம் சொல்கிறது.
 
இது தவிர, சிறையில் தூய்மை பேணுவது, சமையல் செய்வது, நோய் வாய்ப்பட்ட சிறைக்கைதிகளுக்கு உதவுவது போன்ற வேலைகளை செய்யும் சிறைக் கைதிகளுக்கு மாதம் 7 நாட்கள் சலுகை வழங்கும் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த நாட்கள் கணக்கிடப்பட்டு விலக்கு அளிக்கப்படும் என சொல்கிறது சிறை சட்டம்.
 
ஆனால் இதுவெல்லாம் நடக்க வேண்டும்....