வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:43 IST)

சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை: மீண்டும் சிறையா? இல்லை போயஸ் கார்டனா?

சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை: மீண்டும் சிறையா? இல்லை போயஸ் கார்டனா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வருகிறது.


 
 
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து மேல் முறையீடும் முடிந்துவிட்டதால் தற்போது சிறையில் உள்ள சசிகலாவால் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாத சூழலில் இருக்கிறார். எனவே அவர் மீது இருக்கும் ஒரே வாய்ப்பு சீராய்வு மனு ஒன்று தான். 
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனின் சார்பில் மறுசீராய்வு மனு கடந்த மே 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி தான் என உறுதி செய்தது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு. இந்த நீதிபதிகள் அமர்வு தான் மறுசீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
ஆனால் ஆனால் விசாரணை அமர்வில் உள்ள நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த மே 27-ஆம் தேதியே ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த அமர்வுக்கு புதிய நீதிபதியாக ரோஹிந்தன் பாலிநாரிமன் நியமிக்கப்பட்டு, அமிர்தவா யார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் இந்த சீராய்வு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
 
இந்த சீராய்வு மனுவில் வாதங்கள் எதுவும் நடைபெறாது. எல்லாமே எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த சீராய்வு மனுவின் தீர்ப்பு எப்போது கூறப்படும் என தெரியாது. ஒருவேளை நாளையே இதன் மீதான தீர்ப்பு கூறப்படாலம். அல்லது தேதி குறிப்பிடாமல் பின்னர் அறிவிக்கலாம்.
 
தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த சூழலில் சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு வருவது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த சீராய்வு மனுவுக்கு பின்னர் சசிகலா மீண்டும் சிறையில் தான் 4 வருடமும் இருக்க வேண்டுமா அல்லது போயஸ் கார்டனுக்கு திரும்பலாமா எனபது தெரிய வரும். இந்த சீராய்வு மனுவில் 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிட்டு விடுதலை செய்ய சசிகலா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.