சசிகலா புஷ்பாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய எடப்பாடி அணி?


Murugan| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (19:06 IST)
அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை எடப்பாடி அணியினர் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 
சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓ.பி.எஸ் அணி அறிவித்தது. எனவே, அதிமுக அமைச்சர்கள் ஒன்று கூடி தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைப்பது என முடிவெடுத்தனர். தற்போது கட்சி நடவடிக்கைகளில் இருந்து தினகரன் விலகி விட்டார். ஆனால், தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட வேண்டும். மேலும், சசிகலா குடும்பத்தை சேர்ந்த 30 பேரை அதிமுக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஓபிஎஸ் அணி வைத்துள்ளது.
 
ஆனால், அதில் இன்னும் சமரசம் ஏற்படாததால், இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், சசிகலா குடும்பத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு எடப்பாடி அணி முயற்சி எடுத்ததாக தெரிகிறது.
 
இதற்காக, ஒரு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர் இன்று டெல்லி சென்று அவரை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்கு பிடி கொடுக்காத சசிகலா புஷ்பா, நான் தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து குரல் கொடுத்து வருவேன் மேலும் பொதுச்செயலாளருக்கான தேர்தலை சட்டப்படி நடத்துவேன். நானே கூட அதில் போட்டியிடுவேன் என கோபமாக பேசி அவர்களை திருப்பி அனுப்பி விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :