செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (00:57 IST)

பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடி நீக்கம் - சசிகலா உத்தரவு

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

 
தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு மீது சராமாரியாக குற்றம் சாட்டினார். தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் ராஜினாமா செய்ததாகவும் பகிரங்கமாக அறிவித்தார்.
 
பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பின்னர் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
 
கட்சிக்கு எதிரான கருத்தை தெரிவித்ததால் இந்த நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் சூழலில் மிகவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.