Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பதவியேற்கும் முன்பே முதல்வராக அறிமுகம் செய்துக்கொண்ட சசிகலா?


Sugapriya Prakash| Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:55 IST)
பொதுச் செயலாளர் சசிகலா ஓரிரு நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
 
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.
 
இந்நிலையில் சசிகலாவின் டுவிட்டர் பக்கத்தில், பதவியேற்கும் முன்னரே தமிழக முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சசிகலாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த தமிழக அமைச்சர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். 
 
இந்த பக்கத்தில், சசிகலாவின் படத்திற்கு கீழ், தமிழக முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக முதல்வராக அதிகாரப்பூர்வமாக கவர்னர் மூலம் பதவியேற்பதற்கு முன்னரே டுவிட்டரில் பதவியேற்பு நடந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :