Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா தியானம்!

ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா தியானம்!

புதன், 15 பிப்ரவரி 2017 (13:24 IST)

Widgets Magazine

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சகசிலா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று சபதம் செய்து விட்டு அங்கிருந்து ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு கிளம்பி சென்றார்.


 
 
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அவகாசம் தர முடியாது எனவும், உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் இல்லையென்றால் கைது செய்ய உத்தரவிடுவோம் என நீதிபதிகள் கூறிவிட்டனர்.
 
இதனால் கார் மூலமாக, பெங்களூருக்கு செல்ல சசிகலா உள்ளிட்ட மூவரும், போயஸ் கார்டனிலிருந்து கிளம்பினர். இதனையடுத்து ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தினார். அப்போது முனுமுனுத்தவாறே தனது கையால் ஜெ.வின் சமாதியில் அடித்து 3 முறை சபதம் செய்தார்.


 
 
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருக்கு செல்லும் முன்னர் ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கும் சென்றார் சசிகலா. அங்கு எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் வெளியே இருந்த எம்ஜிஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலாவிற்கு அடி மேல் அடி - ஆள் கடத்தல் வழக்கு பாய்ந்தது

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூருக்கு கடத்தி சென்று, வலுக்கட்டாயமாக அவர்களை அடைத்து ...

news

இரண்டு நாட்களில் தமிழக அரசியல் சர்ச்சைக்கு முடிவு: புதிய தகவல்!!

தமிழக அரசியல் குழப்பம் இரண்டு அல்லது மூன்று நாளில் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசின் ...

news

ஜெயலலிதாவும் தான் குற்றவாளி: பிறகு ஏன் கொண்டாடினார்கள் அதிமுக தொண்டர்கள்?

தமிழகமே நேற்றைய சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை கொண்டாடியது. அதிலும் அதிமுக தொண்டர்கள் ...

news

ஜெ. சமாதியில் 3 முறை சபதம் செய்த சசிகலா - மெரினாவில் பரபரப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிலா, மெரினா கடற்கரையில் ...

Widgets Magazine Widgets Magazine