Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரோல் நிபந்தனைகளை கேட்டு சிரித்த சசிகலா!

பரோல் நிபந்தனைகளை கேட்டு சிரித்த சசிகலா!

சனி, 7 அக்டோபர் 2017 (10:15 IST)

Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தனது கணவர் நடராஜனை பார்க்க 5 நாட்கள் பரோலில் சில நபந்தனைகளோடு வந்துள்ளார்.


 
 
சசிகலாவை பரோலில் அனுப்பும் முன்னர் அவரது கையில் நிபந்தனைகள் அடங்கிய இரண்டு பக்க கடிதத்தை அளித்து கையெழுத்திட சொன்னார்கள். அந்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவரது வழக்கறிஞர் அதனை தமிழில் சசிகலாவுக்கு கூறினார்.
 
வீட்டில் இருந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கும் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எங்கும் செல்லக் கூடாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டும் என வழக்கறிஞர் கூறினார். அதற்கு சசிகலா, அது என்ன கணக்கு? நைட்ல அங்கே நான் இருந்தால் என்ன ஆகப்போகுது? என கூறி சிரித்துள்ளார்.
 
மேலும் ஊடகங்களை சந்தித்து எந்தக் கருத்தும் சொல்ல கூடாது. பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. நீங்களாகவே எந்த அரசியல்வாதியையும் சந்திக்கவோ ஆலோசனை நடத்தவோ கூடாது என வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். அதற்கும் சசிகலா, நான்தானே யாரையும் போய் பார்க்க கூடாது, யாராவது என்னைப் பார்க்க வந்தால் பார்க்கலாம் இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு வழக்கறிஞர் அது பார்க்கலாம்ம்மா என கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த கடிதத்தில் சசிகலா கையெழுத்துப்போட்டு கொடுத்துவிட்டு வந்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சசிகலா கணவர் நடராஜனுக்கு செயற்கை சுவாசம்: தீவிர கண்காணிப்பு!

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று பரோலில் வந்துள்ள ...

news

ஆளுநர் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு!

நேற்று நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு ...

news

சைலேந்திரபாபு உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

சிறைத்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு உள்பட 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று திடீரென ...

news

விஜய்மல்லையாவிடம் சலுகை பெற்றாரா சோனியா காந்தி: ரிபப்ளிக் டிவியின் திடுக்கிடும் செய்தி

அர்னாப் அவர்களின் ரிபப்ளிக் டிவி அவ்வப்போது பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு வரும் ...

Widgets Magazine Widgets Magazine