ஜெயலலிதா மறைவால் சசிகலா நடைபிணமாக வாழ்கிறார்: யாருடைய பரபரப்பு பேட்டி இது?

ஜெயலலிதா மறைவால் சசிகலா நடைபிணமாக வாழ்கிறார்: யாருடைய பரபரப்பு பேட்டி இது?


Caston| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (10:12 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைந்ததை அடுத்து அவரது தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சசிகலா நடைபிணமாக வாழ்ந்து வருவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.

 
 
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கூட தனது சந்தேகத்தை பதிவு செய்தார்.
 
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், பெரிய அத்தை(ஜெயலலிதா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 67 நாட்கள் அவருடன் தான் நான் இருந்தேன்.
 
பெரிய அத்தைக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை அவ்வப்போது வழங்கி அவரை அன்போடு சின்ன அத்தை(சசிகலா) பார்த்துக்கொண்டார். 30 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தவர். பெரிய அத்தை இறந்துபோனதால் சின்ன அத்தை ஒரு நடைபிணமாகத்தான் வாழ்ந்து வருகிறார்.
 
இப்படியிருக்கையில் அவருடைய மரணத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுவது எங்களுக்கு மனதேவதனையை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய அத்தை சாவில் எந்த மர்மமோ, சர்ச்சையோ இல்லை என தீபக் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :