"சசிகலா ஒரு பெண் தாதா" - ஈ.வி.கே.இளங்கோவன் பரபரப்பு கருத்து


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (00:38 IST)
சசிகலாவின் உடல் மொழி, பாவம், பேசும் வார்த்தைகள் ஒரு பெண் தாதாவை போல் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

 

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், "சசிகலாவின் உடல் மொழி, பாவம், பேசும் வார்த்தைகள் ஒரு பெண் தாதாவை போல் உள்ளது.

கூவத்துரில் தங்கியுள்ள சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களின் போட்டோகள் மற்றும் வீடியோ இன்று வெளியிடப்பட்டன. அதில் போட்டோவில் உள்ளவர்களின் எண்ணிக்கையை நன்றாக எண்ணி பார்த்துவிட்டேன்.

மேலும் சசிகலாவோடு அமர்ந்து கையை தட்டி கொண்டே இருந்த எம்எல்ஏக்களின் வீடியோவையும் பல முறை பாஸ் செய்து பாஸ் செய்து எண்ணி பார்த்து விட்டேன். 89க்கு மேல் தேறவில்லை. சந்தேகமிருந்தால் நீங்களே எண்ணி பார்த்துகொள்ளுங்கள்” என தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :