மன்னார்குடி கம்பெனியை சேர்ந்த சசிகலா அம்மாவின் வேலைக்காரி: புதிய தலைமையை ஏற்காமல் ஆர்ப்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

மன்னார்குடி கம்பெனியை சேர்ந்த சசிகலா அம்மாவின் வேலைக்காரி: புதிய தலைமையை ஏற்காமல் ஆர்ப்பாட்டம்! (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (09:27 IST)
நேற்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைப்பொறுப்பான பொதுச்செயலாளராக சசிகலா இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
 
இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவிடம் வழங்கினார்கள். அவரும் அதை வாங்கி பொதுச்செயலாளராக சம்மதம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாது என வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள் மன்னார்குடி கம்பெனியை சேர்ந்த சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்க முடியாது.

 

நன்றி :Newsglitz
 
சசிகலா அம்மாவின் வேலைக்காரியாக இருந்தவர் அவரை பொதுச்செயலாளராக ஏற்கமுடியாது. அம்மாவின் அண்ணன் மகள் தீபாவை தான் பொதுச்செயலாளராக ஏற்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :