Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா டுடே நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்-ஐ அவமதித்த சசிகலா?

Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2017 (11:06 IST)

Widgets Magazine

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கான்க்ளேவ் விவாத கருத்தரங்கில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பேதே, அங்கிருந்து கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியா டுடே நிறுவனம், ஆண்டுதோறும் கான்க்ளேவ் என்ற விவாத கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதில் அரசியல், கலை, இலக்கியம், பொருளாதாரம் தொடர்புடைய பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். 
 
இதுவரை டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த கருத்தரங்கு, முதன் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. அதில், 6 மாநில முதலமைச்சர்கள் முதல் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரும் கலந்து கொண்டனர். 
 
மாநாட்டின் துவக்க உரையை ஓ.பி.எஸ் ஆங்கிலத்தில் எழுதி வைத்து வாசித்தார். அவர் பேச ஆரம்பித்த சில வினாடிகளில், கட்சி அலுவலகத்தில் தனக்கு வேலை இருப்பதாக கூறி விட்டு சசிகலா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
 
ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசிக் கொண்டிருகும் போது, சசிகலா எழுந்த சென்ற விவகாரம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 
 
கட்சி பணி காரணமாக அவர் கிளம்பி சென்றார். இதில் என்ன தவறு என சசிகலா ஆதரவாளர்களும், இது முதல்வரை அவமதிக்கும் செயல் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் ஆதங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பீர் பாட்டில் மூடியை விழுங்கிய நபர்; சிகிச்சைக்கு அதை பயன்படுத்திய டாக்டர்!!

தவறுதலாக விழுங்கிய பீர் பாட்டில் மூடியை, காண்டம் உதவியுடன் டாக்டர் வெளியே எடுத்த சம்பவம் ...

news

24 மணி நேரத்தில் 3526 பரோட்டா : இதுவும் சாதனைதான் (வீடியோ)

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஒருவர் ஒரு நாளில் 3526 பரோட்டாக்களை தயாரித்து ...

news

ஜெ.வின் மரணம் திட்டமிட்ட சதியா? - விசாரணையை துவக்குமா சிபிஐ?

மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் மரணத்தில் சதி இருப்பதாக, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ...

news

பொதுவெளியில் பெண்களை விரட்டி விரட்டி முத்தமிட்டு வாலிபருக்கு சிக்கல்

டெல்லியில் பொது இடத்தில் பெண்களை முத்தமிட்டு, அதனை வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட ...

Widgets Magazine Widgets Magazine