வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2015 (10:15 IST)

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சசிகலா

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா திடீரென்று அந்த கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்தார். 
 
தமிழகத்தின்  சுற்றுப்புற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊருகளிலிருந்து பக்தர்கள் வருவதால் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால். பக்தர்களும் கோயிலுக்கு நடந்து கூட செல்ல முடியாமல் பெரும் சிரமத்துகுள்ளாயினர் ,தகவலறிந்து போலீஸார் விரைந்துவந்து அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையல், அதிகாலையில் வீரராகவர் கோயிலுக்கு சசிகலா திடீரென்று  வந்தார். அவருக்கு கோயில் சார்பில், பூரண மரியாதை வழங்கப்பட்டது. அம்மனை தரிசித்துவிட்டு மூலவரை தரிசித்த சசிகலா, பின்னர், கோயில் குளக்கரைக்கு சென்று குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தினார்.

தரிசனம் முடிந்து அவர் திரும்பும்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பித்ரு தோஷம் நீங்க வேண்டி அவர் பூஜை செய்ததாக கோயில் நிர்வாகம் கூறப்படுகிறது.

சசிகலா, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அமாவாசையின் மறுதினம் அதிகாலை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.
 
சசிகலா, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அமாவாசையின் மறுதினம் அதிகாலை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து, மூன்றாவது முறையாக மகாளய அமாவாசையான இன்று காலை வீரராகவர் கோயிலுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.