Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா சிறையில் அடைப்பு - கைதி எண் 10711


Murugan| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:55 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் சரணடைந்தனர்.
 
இந்நிலையில், சசிகலாவிற்கு கைதி எண்ணாக 10711 என்ற எண் ஒதுக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல், அவரின் உறவினர் இளவரசிக்கு 10712 எண் ஒதுக்கப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 


இதில் மேலும் படிக்கவும் :