Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் சசிகலாவுக்கு வேலை ரெடி: சம்பளம் தினமும் ரூ.50


bala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதற்காக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார் சசிகலா. இவருடன் இளவரசியும் சென்றுள்ளார். சுதாகரன் தனியாக பெங்களூர் சென்றுள்ளார்.
 
> பொதுவாக தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலையில் ஏதாவது வேலை ஒன்று வழங்கப்படும். அதற்கு ஊதியமும் சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். ஆனால் இந்த ஊதியத்தை உடனடியாக பெற முடியாது. தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது வழங்கப்படும்.> இந்த நிலையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு பெண்கள் செய்யக்கூடிய வகையில் ஊதுபத்தி உருட்டுவது உட்பட 3 வகை வேலைகள் மாறி மாறி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக தினசரி ரூ. 50 ஊதியம் கொடுக்கப்படும். வாரத்திற்கு ஒருநாள் விடுமுறையும் வழங்கப்படும் என தெரிகிறது.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :