Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.எல்.ஏக்கள் அதிருப்தி? ; சமாதானம் செய்ய கூவத்தூருக்கு சென்ற சசிகலா?


Murugan| Last Updated: சனி, 11 பிப்ரவரி 2017 (16:27 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்து பேச அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சென்றுள்ளார்.

 

 
தமிழக அரசியல் களத்தில் தற்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் பரபரபப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது...
 
ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து விட்டு காத்திருக்கிறார் சசிகலா. அதிமுக எம்.எல்.ஏக்கள் 129 பேரும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூரில்  உள்ள கோல்டன் பே ஹவுஸ் எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்ததும், அவர்களை அழைத்து செல்லும் முடிவில் இருந்தார் சசிகலா. ஆனால், இதுவரை எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இதனால், சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது...
 
இந்நிலையில், கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களில் பலர், தொடர்ந்து அங்கு தங்கியிருப்பதர்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியிருப்பதால், அவர்களை சமாதனப்படுத்த சசிகலா கூவத்தூருக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்கு தலைக்கு ரூ.10 கோடி தருவதாக சசிகலா தரப்பு பேரம் பேசியுள்ளதகாவும் கூறப்படுகிறது. அதில், சிலர் அமைச்சர் பதவியையும் கேட்டுள்ளார்களாம்.

போயஸ் கார்டனில் இருந்து ஏறக்குறைய 80 கி.மீ தூரத்தில் உள்ள கூவத்தூருக்கு சசிகலா சென்றிருப்பதால், அங்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது...


இதில் மேலும் படிக்கவும் :