ஜெ. சாமதிக்கு சென்று வணங்கி விட்டு பெங்களூர் செல்லும் சசிகலா...


Murugan| Last Modified புதன், 15 பிப்ரவரி 2017 (12:00 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து பெங்களூர் செல்ல சசிகலா தரப்பு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது..

 

 
சொத்து குவிப்பு வழக்கில் திர்ப்பு வெளியானதை அடுத்து, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு அவகாசம் தர முடியாது எனவும், உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறிவிட்டனர். 
 
எனவே, கார் மூலமாக, பெங்களூருக்கு செல்ல சசிகலா உள்ளிட்ட மூவரும், போயஸ் கார்டனிலிருந்து தயராகி வருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், ஜெ.வின் சமாதிக்கு சென்று, அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து பெங்களூருக்கு அவர்கள் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது..

webdunia

இதில் மேலும் படிக்கவும் :