வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (15:34 IST)

30 நாட்கள் பரோலில் வருகிறார் சசிகலா?: திக் திக் அமைச்சர்கள்!

30 நாட்கள் பரோலில் வருகிறார் சசிகலா?: திக் திக் அமைச்சர்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா 30 நாட்கள் பரோலில் வர உள்ளதாக ஊடக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றுள்ளர்.
 
இந்த சூழலில் தற்போது சசிகலா இன்று மாலைக்குள் பரோலில் வெளிவர உள்ளதாக ஊடக வட்டாரத்தில் பரபரபப்பாக பேசப்படுகிறது. இது குறித்து ஊடகத்தினர் வெளியிட்டுள்ள செய்திகள் பின்வருமாறு.
 
30 நாட்கள் பரோலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருந்து இன்று மாலை வெளியே வர உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
தன்யா ராஜேந்திரன் என்ற பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலாவின் பரோல் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. சிறைத்துறை டிஜிபி தி நியூஸ் மினிட் பத்திரிகையாளர் ராகமாலிகாவிடம் சசிகலாவுக்கு பரோல் உறுதியாகவில்லை என கூறியதாகவும், எனினும் அந்த டிஜிபி தற்போது விடுப்பில் உள்ளதாகவும் அவர் சிறை அதிகாரிகளிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


 
 
டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையின் நிரூபர் சந்தேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், அதிமுகவின் சசிகலா 30 நாட்கள் பரோல் பெற்றுள்ளதாகவும் இன்று மாலை அவர் சிறையில் இருந்து வெளிவர உள்ளதாகவும் கூறியுள்ளார்.


 
 
அதிமுக ஆதரவாளரான பரதன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்காக சசிகலாவை பரோலில் விட உள்ளதாக கூறியுள்ளார்.


 
 
அரவிந்த் குனசேகரன் என்ற பத்திரிகையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், சசிகலா பரோலில் வெளிவர மாட்டார் எனவும், அவரது சார்பில் எந்த மனுவும் அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.


 
 
பிரியா குருநாதன் என்ற ஊடக செயல்பாட்டாளர் தனது டுவிட்டர் பக்கத்தில், அதிமுக தலைவர் சசிகலா 30 நாட்கள் பரோலில் வெளிவர உள்ளதாகவும், இன்று பிற்பகலில் அவர் பரப்பன அக்ராஹர சிறையில் இருந்து வெளிவருகிறார் என கூறியுள்ளார்.


 
 
ஊடக வட்டாரத்தில் இப்படி சசிகலாவின் பரோல் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வருதால் அதிமுக அமைச்சர்கள் ஒரு வித பதற்றத்தில் உள்ளனர். சசிகலா வெளியே வந்தால் கட்சியில் என்னென்ன அதிரடிகள் இருக்குமோ என அமைச்சர்கள் திக் திக் மொமெண்டில் உள்ளனர்.