Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தடை நீங்கியது: பரோலில் வருகிறார் சசிகலா!

தடை நீங்கியது: பரோலில் வருகிறார் சசிகலா!

வியாழன், 5 அக்டோபர் 2017 (15:45 IST)

Widgets Magazine

கடந்த சில தினங்களாக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த சசிகலாவுக்கு சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், அவர் பரோலில் வெளியே வர உள்ளது உறுதியாகியுள்ளது.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது.
 
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
 
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா பரோலில் வெளிவருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலா இன்று மாலையோ அல்லது நாளை காலையோ பரோலில் வெளிவரலாம் என கூறப்படுகிறது. சசிகலாவுக்கு ஜோதிடப்படி இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மாருதி சுசூகி கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை; காலை ஷிப்டு பணி நிறுத்தம்

அரியானா மாநிலம் மானேசரில் உள்ள கார் தொழிற்சாலைக்குள் சிறுத்தை புகுந்ததால், காலை ஷிப்டு ...

news

24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை - வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் ...

news

நடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி!

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ததில் காட்டிய துரிதத்தை ...

news

பாகிஸ்தான் மீது பாய காத்திருக்கும் அமெரிக்கா: டிரம்ப் நேரடி எச்சரிக்கை!!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ...

Widgets Magazine Widgets Magazine