Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

30 வருஷம் கட்டிக்காத்தார் சசிகலா: மூன்றே மாதத்தில் அழித்தார் தினகரன்

புதன், 19 ஏப்ரல் 2017 (22:31 IST)

Widgets Magazine

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் சரி, மறைந்த போதும் சரி, சசிகலா என்ற பெயர் அதிகாரத்தின் உச்சமாக கருதப்பட்டது. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்தனர். சசிகலாவை எதிர்த்து பிரதமர் உள்பட யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாட்களே சாட்சி 


இவ்வாறு ஜெயலலிதாவுடன் இணைந்து 30 வருடமாக கட்டிக்காத்த அந்த அதிகார பயத்தை அவர் சிறைக்கு சென்ற பின்னர் மூன்றே மாதங்களில் தினகரன் அழித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முப்பது வருடங்கள் அதிமுகவின் அதிகாரவர்க்கமாக இருந்த சசிகலா குடும்பத்தை இன்று கட்சியில் இருந்தே விரட்டும் தைரியம் அனைத்து அதிமுகவினர்களுக்கும் வந்துவிட்டது. எதிர்த்து பேசவே தயங்கியவர்கள் இன்று தினகரன் கட்சி ஆபீசுக்குள் நுழையவே கூடாது என்றும், சசிகலாவை குடும்பத்தை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்றும் தைரியமாக பேசி வருகின்றனர். இந்த மாற்றம் மக்களுக்கும் அதிமுகவுக்கும் நல்லதுதான் என்றாலும் இந்த மாற்றமும் பதவியை தக்கவைத்து கொள்ளும் சுயநலம் கருதியே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

36 நாட்கள் நடந்தும் விவசாயிகள் போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

தலைநகர் டெல்லியில் கடந்த 36 நாட்களாக நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் கொஞ்சம் ...

news

மொட்டை அடிச்சாச்சு, 10 லட்ச ரூபாயை கொடு! இஸ்லாமிய எழுத்தாளருக்கு பிரபல பாடகர் சவால்

பாலிவுட்டின் முன்னணி பாடகரில் ஒருவரான சோனு நிகம் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ...

news

கேரளாவை உலுக்கிய புகைப்படம்: விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு

சபரிமலை ஐப்பன் கோயிலில் இளம்பெண்கள் சிலர் தரிசனம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி ...

news

உடல் நிலை பாதிப்பு : இளவரசி கோரிக்கையை நிராகரித்த சிறை நிர்வாகம்

பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு உடல் நிலைக் குறைபாடு ...

Widgets Magazine Widgets Magazine