Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கட்சியில் விலகல் கடிதம் கொடுத்த ஓ.பி.எஸ்.; மறுத்த சசிகலா: பின்னணி என்ன?

Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (23:45 IST)

Widgets Magazine

தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
 

 
ஆனால், முன்னதாக போயஸ் கார்டனில் சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதாவது செவ்வாய் அன்று மாலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு எந்த பதவியும் வேண்டாம். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சசிகலாவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்.
 
ஆனால் அந்த கடிதத்தை சசிகலா ஏற்க மறுத்ததோடு, விலகல் கடித்தால் மிகுந்த வருத்தம் கலந்த கோபத்தோடு இருந்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்க உள்ள இந்த நேரத்தில் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகினால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்று சசிகலா கருதியுள்ளார்.
 
இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தை சமானப்படுத்தும் முயற்சியிலும் போயஸ் கார்டனில் உள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இந்த நடவடிக்கையில் சமாதானம் அடையாததால் தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மவுன அஞ்சலி செலுத்தியதாக தெரிகிறது.
 
அதனால் தான் மவுன அஞ்சலி குறித்து விளக்கிய போது, ‘மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெ., நினைவிடத்திற்கு வந்தேன்” என்று தெர்வித்துள்ளார் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நாட்டையே உலுக்கிய பன்னீர் செல்வம் பேட்டி

அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா விரைவில், தமிழக முதல்வராக ...

news

ஜெயலலிதா பொதுச் செயலாளராக யாரை நியமிக்க சொன்னார்?: ஓ.பி.எஸ் அதிரடி தகவல்

அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனனை நியமிக்குமாறு ஜெயலலிதா என்னிடம் கூறினார் என்று ...

news

ஜெயலலிதா சமாதியில் இரவில் மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ...

news

கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர்: மௌனம் கலைத்தார் பன்னீர் செல்வம்

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ...

Widgets Magazine Widgets Magazine