கதறி அழுத படி சம்மதம் தெரிவித்த சசிகலா...


Murugan| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:06 IST)
மிகுந்த எதிர்பார்புகளுக்குடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

 

 

 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை எனவே, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் தற்போது போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அவரை நேரில் சந்தித்து, பொதுக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு சசிகலாவை வலியுறுத்தினர்.
 
தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அதை வாங்கிய சசிகலா, அங்கிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு கீழே வைத்து கண்ணீருடன் வணங்கினார். அப்போது அவர் தேம்பி தேம்பி அழுதார். சிறுது நேரம் மவுனமாக ஜெ.வின் படம் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
 

 
அதன்பின், கழகத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சசிகலா சம்மதமும் தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :