Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவின் காரை கழற்றி விட்ட சசிகலா!

ஜெயலலிதாவின் காரை கழற்றி விட்ட சசிகலா!


Caston| Last Modified சனி, 11 பிப்ரவரி 2017 (15:17 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின்னர் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சசிகலா ஜெயலலிதா பயன்படுத்தி வந்த அதே காரை தான் பயன்படுத்தி வந்தார்.

 
 
ஜெயலலிதா இறந்த பின்னரும் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் தொடர்ந்து வசித்து வருகிறார் சசிகலா. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
 
மேலும் ஜெயலலிதாவின் கார் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் என்ன ஆனது அதனை உரிமை கொண்டாடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது காரை பயன்படுத்தி வந்த சசிகலா தற்போது அதனை மாற்றியுள்ளார்.
 
இன்று அவசர அவசரமா கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க சசிகலா விரைகிறார். இவர் வழக்கமாக செல்லும் ஜெயலலிதாவின் காரை தவிர்த்துவிட்டு வேறு காரில் சென்று கொண்டிருக்கிறார். அவசர அவசரமாக கிளம்பியதால் வேறு காரில் செல்கிறார் என கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :