குதிரை பேரத்தை தொடங்கிய சசிகலா?: காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சி!

குதிரை பேரத்தை தொடங்கிய சசிகலா?: காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சி!


Caston| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:58 IST)
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் முதல்வர் பதவியை கைப்பற்ற முயன்றதும் போர்க்கொடி தூக்கியுள்ளார் பன்னீர்செல்வம்.

 
 
இருதரப்பினரும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். சசிகலா தனது எம்எல்ஏக்களின் பலத்தை நிரூபித்து முதல்வராக துடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தனது பலம் என்ன என்று சட்டசபையில் தெரியும் என புன்னகைக்கிறார் ஓபிஎஸ்.
 
தற்போது உள்ள சூழலில் சசிகலாவுக்கு பெரும்பான்மை கிடைக்காத எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் சசிகலா தரப்பு சற்று கலக்கம் அடைந்துள்ளது.
 
இதற்கு மாற்று ஏற்பாட்டாக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சசிகலா தரப்பு பேரம் நடத்துவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருடன் சசிகலா தரப்பு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வருகின்றன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :