Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத சசிகலா!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 30 டிசம்பர் 2016 (23:56 IST)
அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு முதன்முறையாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த சசிகலா அங்கு கண்ணீர் விட்டு அழுதார்.

 

கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானதற்குப் பிறகு, கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக வியாழன் அன்று [29-12-2016] அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டபட்டு அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, அஞ்சலி செலுத்தியபோது சசிகலா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :