Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் சசிகலா பரபரப்பு பேச்சு....


Murugan| Last Updated: புதன், 8 பிப்ரவரி 2017 (12:53 IST)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் முடிவடைந்தது.

 

 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
 
அதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கலந்து கொண்டு எம்.எல்.ஏக்களிடம் பேசினார்.
 
5ம் தேதி என்னை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்து விட்டு, 48 மணி நேரத்தில் ஓ.பி.எஸ் மன நிலையில் மாற்றம் ஏன்? என சசிகலா கேள்வி எழுப்பினார்.
 
மேலும், ஓ.பி.எஸ்-ஐ பின்னணியில் இருந்து இயங்குவது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை. ஜெயலலிதா சக்தி நம்மிடம் இருக்கும் வரை வேறு எந்த சக்தியாலும்  நம்மை அசைக்க முடியாது. எனவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் பின்பும் செல்லாமால் உறுதியுடன் இருக்க வேண்டும். ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :