சிறையில் ஆம்பூர் பிரியாணி சாப்பிடும் சசிகலா!

சிறையில் ஆம்பூர் பிரியாணி சாப்பிடும் சசிகலா!


Caston| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (11:07 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை எனவும், இதனால் அவருக்கு ஆம்பூரில் இருந்து பிரியாணி அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு சிறையில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா அதிரடியாக ஊடகத்தினருக்கு தெரியப்படுத்தினார்.
 
இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகமாகின. இதனையடுத்து சசிகலாவுக்கு மற்ற கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவு தான் கொடுக்கப்பட்டது. இதனை சசிகலாவால் சாப்பிட முடியவில்லையாம்.
 
இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த தினகரனிடம் சசிகலா இது குறித்து வருத்தத்துடன் கூறியதாகவும் அதன் பின்னர் தினகரன் தான் கையில் கொண்டு வந்த பார்சலை சசிகலா கையில் கொடுத்துள்ளார். மேலும் எம்எல்ஏ ஒருவரிடம் கூறி ஆம்பூரில் இருந்து பிரியாணி சசிகலாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார் தினகரன்.
 
ஆம்பூரில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் பிரியாணி பெங்களூருக்கு செல்கிறதாம். இந்த பிரியாணி சசிகலாவுக்கு மட்டுமில்லையாம், சிறை அதிகாரிகளுக்கும் சேர்த்துதானாம். மீண்டும் பணத்தை கொடுத்து அதிகாரிகளை வளைத்துள்ளதாக கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :