Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாற்றம் முன்னேற்றம் சசிகலா: ஓபிஎஸை அழைத்து மலர் வளையம் வைத்த அரிய காட்சி!

மாற்றம் முன்னேற்றம் சசிகலா: ஓபிஎஸை அழைத்து மலர் வளையம் வைத்த அரிய காட்சி!


Caston| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (13:03 IST)
அறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அவரது சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினர்.

 
 
அண்ணா சமாதிக்கு வந்த சசிகலா முன்னிலையில் நிற்க கட்சியினர் அவருக்கு பின்னால் கூட்டமாக நின்றனர். அந்த கூட்டத்தில் ஒருவராக முதல்வர் பன்னீசெல்வமும் நின்று கொண்டிருந்தார்.
 
இதனையடுத்து கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த முதல்வர் பன்னீர்செல்வத்தை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அழைத்து அவருடன் சேர்ந்து அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார். இந்த காட்சியை பார்த்த அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
 
தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வத்தை சசிகலா அவமதித்து வந்ததாக அதிமுக வட்டாரத்திலேயே பேசி வந்தனர். சமீபத்தில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சசிகலா பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைத்தது பல அதிர்வலைகளை உருவாக்கியது.
 
இந்நிலையில் தற்போது கூட்டத்தில் நின்ற முதல்வர் பன்னீர்செல்வத்தை அழைத்து தன்னுடன் சேர்ந்து மலர் வளையம் வைத்தது அதிமுகவினருக்கே வியப்பாக இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :