Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மதுசூதனனை நீக்கிய சசிகலா


bala| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:24 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததும் சசிகலா அதிருப்தியாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓபிஎஸ் பக்கம் அணிதிரள்கின்றனர்.

 

நேற்று அதிரடி திருப்பமாக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் சேர்ந்தார். ரவுடிகள் கும்பலில் இருந்து அதிமுகவை மீட்கவே பன்னீருடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மேலும் அதிரடியாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க அங்கீகாரம் அளிக்க கூடாது என கூறினார்.

இந்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனை நீக்கி சசிகலா உததரவிட்டுள்ளார். மேலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கே.ஏ.செங்கோட்டையன் அவைத்தலைவராக நியமித்து சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :