1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (06:03 IST)

பழனி முருகன் கோவிலுக்கு சசிகலா சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

பழனி முருகன் கோவிலுக்கு சசிகலா சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழி சசிகலா பழனி முருகன் கோவிலுக்கு சென்றதன் பின்னணித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
தமிழக்தில் உள்ள பிரபல கோவில் பழனி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் தோழி  சசிகலா சென்றார். மதியம் சரியாக 12 மணியளவில் கோவிலுக்கு வந்த சசிகலாவிற்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பயபத்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
 
சசிகலாவின் வருகையையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி  சசிகலா பழனி முருகன் கோவிலுக்கு சென்றது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜோதிடர்கள் அறிவுரையின் பேரிலே அவர் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, ஜோதிடர்கள் சிலரிடமும் கேட்ட போது, அவர்கள் நம்மிடம்,  சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
 
முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், நாட்டு தளபதிகள், நீதிபதிகள், பொரியியல் வல்லுனர்கள் முதலானோர்களின் ஜாதகங்களில் செவ்வாயின் பலம் அதிகமாக இருக்கும்.
 
பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரை வெல்லும் தன்மை, மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன்.  ஆகியவை செவ்வாய் கிரகத்தின் தன்மை ஆகும்.
 
மேலும், நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமை திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதியும் செவ்வாய் கிரமமே.
 
செவ்வாய் பகவானை வணங்கினால் அதிகாரம் நமது கைக்கு வரும். முருகனை செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வமாக வணங்கப்படுகிறது. அதனால் அவர் முருகன் கோவிலுக்கு சென்று இருக்கலாம் என்றார். அத்துடன் முருகன் கோவிலில் தான் சித்தர்களில் மிகவும் சக்திவாய்ந்தவருமான போகர் சித்தர் உள்ளார். அவரை வணங்கினாலே வெற்றி நிச்சயம்.
 
தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொருவரும் தங்களது வெற்றிக்கு கடவுளை வணங்குவது இயற்கையே என்றார்.
 
அதிமுக மூத்த தலைவர்கள் சிலரிடம் கேட்ட போது, தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே  முருகன் கோவிலுக்கு சசிகலா வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். பிராத்தனை நிறைவேறிய உடன் நேர்த்திக்கடன் செலுத்துவார் என்கின்றனர்.