1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (19:35 IST)

சசி பெருமாள் உயிரை காப்பாற்ற காவல்துறையினரும், அரசினரும் தவறிவிட்டனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

காவல் துறையினரோ, அரசினரோ விரைவில் சசி பெருமாளோடு பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் ஒப்புதல் அளித்திருந்தால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
சசி பெருமாள் "செல்போன் டவரில்" உயர ஏறி போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரும், அரசினரும் எப்படி அனுமதித்தார்கள், அவர் நீண்ட நேரம் உச்சியிலே நிற்கும்வரை எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் வேதனையாக இருக்கிறது.
 
காவல் துறையினரோ, அரசினரோ விரைவில் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் ஒப்புதல் அளித்திருந்தால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது.
 
"துன்பம் எப்போதும் துணையோடு வரும்" என்பார்களே, அதைப் போல காந்தியவாதியான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த துயருடன் நாம் இருக்கும்போதே மற்றொரு காந்தியவாதியான சசி பெருமாள் மறைந்தது மிகுந்த துயரத்தை அளிக்கின்றது.
 
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும், நண்பர்களுக்கும் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.