Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வீடியோவை வைத்து சரவணனை மிரட்டிய தொலைக்காட்சி: பேரம் படியாததால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

வீடியோவை வைத்து சரவணனை மிரட்டிய தொலைக்காட்சி: பேரம் படியாததால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!


Caston| Last Modified புதன், 14 ஜூன் 2017 (11:17 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளார். சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்கியதாக இவர் கூறியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

 
 
இந்த வீடியோ மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியே தெரியாத தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் நபர்களால் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வீடியோவை வைத்து சரவணனிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் இந்த பேரம் படியாததால் தான் அந்த வீடியோவை வேறு தொலைக்காட்சிக்கு விற்று தற்போது வெளியிட்டுள்ளனர் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
எம்எல்ஏ சரவணன் தனக்கு நன்கு தெரிந்த நபர் ஒருவரிடம் நடந்த சம்பவங்களை விரிவாக விவரித்துக்கொண்டிருந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு எம்எல்ஏ சரவணனிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த நபர்கள்.
 
ஆனால் சரவணன் இந்த வீடியோ பெரிய அளவில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த வீடியோ வெளியானால் எனக்கு எந்த சிக்கலும் வராது என பணம் கேட்டவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தான் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விற்று வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :