Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வருமான வரித்துறை அலுவலகத்தில் ராதிகாவும் சரத்குமாரும் - கிடுக்குபிடி போடும் அதிகாரிகள்


Murugan| Last Updated: புதன், 12 ஏப்ரல் 2017 (18:19 IST)
ராடான் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து ராதிகாவும், அவரின் கணவர் சரத்குமாரும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.

 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக பல புகார்கள் எழுந்ததால், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்தினர். 
 
அதன் பின் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர். அப்போது சரத்குமாரிடம் பல கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். 
 
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவரின் மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
 
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி தற்போது விளக்கம் அளித்து வருகின்றனர். அவர்களிடம் கேட்பதற்காக கேள்விகளை தயாராக வைத்திருந்த அதிகாரிகள், பல கிடுக்குப்பிடி கேள்விகளை அவர்களிடம் கேட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :