வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார் - கடும் உடற்பயிற்சி [வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 24 ஜூன் 2016 (16:26 IST)
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சரத்குமார், உடற்பயிற்சி கூடத்தில், கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஒன்றை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முன்னாள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். கடந்த தேர்தலில் அவர் விஷால் அணியிடம் தோல்வியை தழுவினார்.
 
அதே போல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து திருச்செந்தூர் தொகுதிகளில் போட்டியிட்டு திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார்.
 

 
தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருந்த அவர் நேற்று காலை திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.
 
பின்னர், இதுபற்றி அவரது மனைவி ராதிகா விளக்கம் கூறுகையில் “சரத்குமார் பற்றி வெளியான செய்திகளில் உண்மையில்லை. தேவையில்லாமல் தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். அவருக்கு வயிற்றுக்கோளாறு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்” என்று தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், அவர் உடற்பயிற்சி கூடத்தில், கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஒன்றை சரத்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
வீடியோ கீழே:
 இதில் மேலும் படிக்கவும் :