1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (18:04 IST)

சைக்கிளில் கடத்தப்பட்ட மணல் மூட்டைக்கு தீ வைத்த கரூர் மக்கள்

சைக்கிளில் கடத்தப்பட்ட மணல் மூட்டைக்கு தீ வைத்த கரூர் மக்கள்

சைக்கிளில்  மணல் திருடி சென்ற வாலிபரை மடக்கிப்பிடித்து, மணல் மூட்டையை பொதுமக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஒடப்பேரி பாலாற்றில் தினசரி பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு, அந்த கிராமத்தில் உள்ள கிணறுகள் வரண்டுபோனதாகவும் இதனால் அந்த கிராமத்தில் குடிநீர் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
 
பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாலாற்றில் கள்ளத்தனமாக மணல் எடுத்துகொண்டிருந்த இருவரை மணல் மூட்டைகளுடன் பிடித்து மணல் மூட்டைகளை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் வாணியம்பாடி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.


 

 
பின்னர் கிராம இளைஞர்கள் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 
 
பின்னர் கிராம மக்கள் பேசிய போது  தாங்கள் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த மணல் கடத்தல்காரர்கள் தங்களை மிரட்டுவதாகவும், மேலும் அந்த மணல் கடத்தல்காரர்களிடம் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாகவும் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர்.
 
உடனடியாக சம்பந்த பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.