Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னையும் இளவரசியையும் ஒரே சிறையில் அடையுங்கள்: சசிகலா கோரிக்கை


Abimukatheesh| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (19:11 IST)
சசிகலா மற்றும் இளவரசி பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். தன்னையும், இளவரசியையும் ஒரே சிறையில் அடைக்க சசிகலா நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 
நேற்று உச்ச நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறிது செய்யப்பட்டது. இதையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி பரப்பன அக்ரஹார சிறை வாளாகத்தில் சரணடைந்தனர்.
 
அங்கு நீதிபதியிடம் சசிகலா தன்னையும், இளவரசியையும் ஒரே சிறையில் அடைக்க கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு நீதிபதி அதை சிரை அதிகாரி முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இதையடுத்து சசிகலாவும் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா கைதி எண் 10711, இளவரசி கைதி எண் 10712 ஆகும்.


இதில் மேலும் படிக்கவும் :