வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2015 (22:44 IST)

அக்டோபர் 15ஆம் தேதி: அப்துல் கலாமை கவுரவிக்க தபால் தலைகள் வெளியிட அஞ்சல்துறை முடிவு

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி அவரது நினைவாக 4 தபால் தலைகளை வெளியிடவுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 

 
முன்னாள் குடியரது தலைவர்  அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பீகாரில் விவசாய கல்லூரிக்கு, அப்துல் கலாம் பெயரை சூட்டப் போவதாக அம்மாநில அரசு அறிவித்தது.
 
அதே போல, மத்திய பிரதேசத்தில், வாழ்க்கை வரலாறை பாடமாக நடத்தப் போவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
 
மேலும், அப்துல் கலாம் பெயரில், அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலுக்கு பாடுபட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி அவரது நினைவாக 4 தபால் தலைகளை அஞ்சல் துறை வெளியிடஉள்ளது.
 
இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.