1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 31 டிசம்பர் 2015 (12:16 IST)

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

சைதாப்பேட்டையில் ஆடையாறு ஆற்றின் கரைகளில் வசித்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.


 

 
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை ஓடும் கூவம் ஆறு, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் குடிசை போட்டு வசித்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி குடிசைகளையும், உடமைகளையும் இழந்தனர்.
 
இந்தநிலையில், ஒக்கியம் துரைபாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரிய சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அடையாறு ஆற்றங்கரைகளில் குறிப்பாக சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்தின் அருகில் வசித்து வந்தவர்களுக்கு தற்போது தமிழக அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. 
 
புதிய வீடுகளுக்களைப் பெற்றவர்கள் அழைத்து செல்லப்பட்டு ஒக்கியம் துரைபாக்கத்தில் உள்ள புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். 
 
வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள், ஏற்கனவே ஆற்றங்கரைகளில் கட்டப்பட்டிருந்த குடிசைகளையும், அப்புறப்படுத்தி, ஆற்றங்கரைகளுக்கான எல்லையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.