புதிய தலைமைச் செயலாளர் சகாயம்?: பெருகும் ஆதரவு!

புதிய தலைமைச் செயலாளர் சகாயம்?: பெருகும் ஆதரவு!


Caston| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:27 IST)
தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை நேற்று காலை அதிரடியாக சோதனை நடத்தியது. இந்த சோதனை இன்றும் தொடரும் என கூறப்படுகிறது.

 
 
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது மகன் வீடு தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை என வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதற்காக பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை கூட வரவழைக்கப்பட்டது.
 
இதனையடுத்து தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. சகாயம் ஒரு நேர்மையான அதிகாரி. மதுரையில் கிரானைட் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.
 
சகாயம் திறமையானவர் அவர் தமிழக தலைமை செயலாளராக வந்தால் அரசு இயந்திரம் ஊழலில்லாமல் இயங்கும் என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :