1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (06:00 IST)

எப்படி இருந்த தி.நகர் இப்படி ஆயிருச்சே! வியாபாரிகள் புலம்பல்

தி.நகர் உஸ்மான் சாலை என்றாலே வேலை நாட்களில் கூட கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு கூட்டம் உள்ள தி.நகர் உஸ்மான் சாலை தற்போது கூட்டமே இல்லாமல் உள்ளது.



 


கடந்த 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை எரிந்து, தீ அணைக்கப்பட்டாலும் அந்த கடை தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்கள் அந்த பகுதியில் அதிகம் உள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை சில்க்ஸ் அருகில் இருந்த கடையும் திடீரென தீப்பிடித்தது. புரசைவாக்கத்திலும் ஒரு மால் தீப்பிடித்தது.

இதனால் பொதுமக்கள் பர்சேஸ் செய்ய தி.நகர் பக்கமே வர அஞ்சுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது சிறு வியாபாரிகளும் பிளாட்பார வியாபார்களும் தான். போலீசார் கெடுபிடி காரணமாக வழக்கமான இடத்தில் கடை போட முடியாத நிலை, அப்படியே வேறு இடம் பார்த்து போட்டாலும் கூட்டம் இல்லாததால் மதியம் வரை போனிகூட பண்ண முடியாத நிலை தான் சிறு வியாபாரிகளுக்கு இருந்து வருகிறது. தற்போது சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கும் பணி மேலும் ஒரு வாரம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.