வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (09:23 IST)

தமிழச்சியை காப்பி அடித்த பாதிரியாருக்கு சிறை

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தமிழச்சி எழுதிய முகநூல் பதிவை பகிர்ந்து, தானும் அதேபோல் பதிவுகள் இட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டார்.


 

 
அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த எஸ்.சந்துரு(36) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஜேசுராஜ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
 
அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினரும், கணினி துறையில் நிபுணத்துவம் பெற்ற குழுவினரும் ஜேசுராஜ் ஃபேஸ்புக் கணக்கை ஆராய்ந்து பார்த்தனர்.
 
அந்த ஃபேஸ்புக் கணக்கு தூத்துக்குடி மாவட்டதைச் சேர்ந்த ஆண்டனி ஜேசுராஜ்(24) என்பவரது என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரை கைது செய்து விசாரணையில் நடத்தினர்.
 
விசாரணையில் அவர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டார். 
 
மேலும் ஆண்டனி ஜேசுராஜ், முதல்வர் உடல்நிலை குறித்து பிரான்ஸ் தமிழச்சி எழுதிய அந்த பதிவை ஷேர் செய்து, அதுபற்றி மேலும் வதந்தி பரப்பும் விதமாக எழுதியுள்ளார்.