வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (18:17 IST)

கர்நாடகாவில் காவிரி நதி நீர் பிரச்சினையால் ரூ 200 கோடி டெக்ஸ்டைல் வர்த்தகம் கரூரில் பாதிப்பு

கர்நாடகாவில் கடந்த 19 நாட்களாக காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கன்னட இயக்கத்தினர் தாக்குதல் நடத்துவதோடு, ஆங்காங்கே தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் லாரிகள், கண்டெயினர் ஆகியவைகள் மட்டுமல்லாமல் தமிழர்களையும் தாக்கி வரும் சம்பவத்தில், தமிழர்களுக்கு சொந்தமான வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றது.


 

இதுகூறித்து தனியார் டெக்ஸ்டைல் அதிபர் ஒருவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முற்றிலும் தேக்கமடைவதோடு, உற்பத்திக்கு தேவையான பொருட்களும் மும்பை வழியாக கர்நாடகா வந்து தான் தமிழகம் வரும், ஆனால் இந்த பிரச்சினையை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ரூ 10 கோடி வீதம் சரக்குகள் தேங்கி இன்றுடன் 19 நாட்கள் ஆவதால் சுமார் 200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி நதி நீர் பிரச்சினையால் தமிழகத்திலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் வாகனங்கள் செல்லாமல் அதன் மூலம் பாம்பே, டில்லி ஆகியவைகளிலிருந்து வரும் பொருட்கள் வரும் வழியில் லாரிகளை கொழுத்தியுள்ளனர். மேலும் இதனால் அங்கிருந்து ஜவுளி தொழிலுக்கு வரும் பொருட்களும் வரமால், இங்கிருக்கும் தயார் படுத்தப்பட்ட பொருட்கள் அங்கே செல்லமுடியாமல் தவிப்பதால் வர உள்ள வாய்ப்பு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டால் ஜவுளித்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே வர உள்ள தீபாவளியை முன்னிட்டாவது மத்திய, மாநில அரசு  நடவடிக்கை எடுத்தால் மட்டுமே டெக்ஸ்டைல் தொழில் சீர் நிலை அடையும், ஆகவே இந்த நடவடிக்கையை துரித வேகத்தில் எடுக்காவிட்டால் ஜவுளித்தொழில் முற்றிலும் நலிவடைவதோடு, இதை நம்பி இருக்கும் டைலர்கள், டெக்ஸ்டல்லில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் என்று லட்சக்கணக்கான நபர்களுக்கு பணியில்லா திண்டாட்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றார்.