வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (16:13 IST)

புதிய பேருந்துகள் : ஜெ.வுக்காக காத்திருந்ததால் அரசுக்கு ரூ.14 கோடி நஷ்டம்

தமிழக அரசு சார்பில் புதிதாக தயாரிக்கப்பட்ட சொகுசு பேருந்துகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக காத்திருந்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 
நெடுதூரம் பயணிப்பவர்கள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வதால் அரசு பேருந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான்,  500க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, கழிப்பறை, மின் விசிறி, சிசிடிவி கேமரா என அனைத்து வசதிகளும் இந்த பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான மத்திய தணிக்கை துறையின் அறிக்கை நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
 
2012-2017ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் மொத்தம் 4357 புதிய பேருந்துகள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்டன. ஆனால், 2020 புதிய பேருந்துகள் குறித்த காலத்திற்குள் இயக்கப்படவில்லை. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க தேதி கொடுக்காததால் 3 மாதங்கள் அந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்காக ரூ.10.29 கோடி வட்டியாக தமிழக அரசு கொடுத்தது. அதேபோல், எரிபொருள் சேமிப்பில் ரூ.3.94 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்தத்தில் புதிய பேருந்துகளை குறித்த காலத்திற்குள் இயக்காததால் அரசுக்கு ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.