வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2014 (16:13 IST)

விமான நிலையம் அருகே ஆட்டோவை மடக்கி "குருவி"யிடமிருந்து 80 லட்சம் டாலர்கள் கொள்ளை

சென்னை விமான நிலையம் அருகே சென்ற ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவரிடமிருந்து இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது.
 
சென்னை கிண்டி - தாம்பரம் சாலையில் பஷீர் என்பவர் நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணியில் இருந்து ஆட்டோவில் 2 அட்டை பெட்டிகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். மீனம்பாக்கம் அருகே  சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவை, மற்றொரு ஆட்டோவில் வந்த கும்பல் வழி மறித்துள்ளது. அப்போது, பஷீரை மிரட்டி, அந்த ஆட்டோவில் இருந்த 2 அட்டை பெட்டியை தூக்கி தாங்கள் வந்த ஆட்டோவில் எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
இது குறித்து பஷீர்,  தான் ஆட்டோவில் எடுத்து வந்த அட்டைப்பெட்டியை ஒரு கும்பல் என்னை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடித்து சென்றது என்றும் அதில் விலை உயர்ந்த துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தத என்றும் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரின் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். 
 
பஷீர் கூறுகையில், "நான் குருவியாக செயல்பட்டேன். விமானத்தில் பொருட்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதும் அங்கிருந்து பொருட்களை சென்னைக்கு கொண்டு வருவதும் என்னுடைய வேலை. குருவிகளான எங்களிடம் பெட்டியில் என்ன இருக்கிறது, எவ்வளவு பணம் உள்ளது என்பதை பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள். நான் எடுத்துச் செல்லும் பொருளை விற்றுவிட்டு அங்கிருக்கும் பொருட்களை இங்கு வந்து கொடுப்பேன். பொருட்களை ஒப்படைத்த பிறகு எனக்கு பணம் கொடுப்பார்கள். 
 
திருவல்லிக்கேணியில் இருந்து 2 அட்டைப்பெட்டியை என்னிடம் கொடுத்து சிங்கப்பூரில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் என்னிடம் இருந்து 2 அட்டைப் பெட்டிகளை பறித்து சென்று விட்டனர். பெட்டியில் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.