1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (09:29 IST)

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகின்றது, ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ராணி மேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
 
இதில் பதிவான 16 தபால் வாக்குகளையும் பெற்று ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்கு 9,546 வாக்குகளும், இந்திய கம்யூ கட்சியின் வேட்பாளர் மகேந்திரனுக்கு 930 வாக்குகளும் பெற்றனர்.
 
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா 20,398 வாக்குகளும், மகேந்திரன் 1,647 வாக்குகளும் பெற்றனர்.
 
தொடர்ந்து ஜெயலலிதா முன்னிலையில் இருந்தவரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரியில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள் தங்கள் தலைவி வெற்றி பெற்றுவிட்டதாக கூறி மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இத்தேர்தலில் பதிவான 74.4 சதவீத வாக்குகளும் பிற்பகலுக்குள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 83,777 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு 52,522 வாக்குகளும் பெற்றன.
 
அதே போல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு 74,760 வாக்குகளும், திமுகவின் கிரிராஜன் 48,301 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.