வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 நவம்பர் 2015 (06:25 IST)

வாக்காளர் பட்டியல் திருத்தம் - செல்போன் மூலம் தகவல் அனுப்ப ஏற்பாடு: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தகவல்களை, மனுதாரர்களுக்கு, செல்போன் மூலம் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் சார்பில்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
 
இதில் பெயர்கள் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான மனுக்கள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வரை பெறப்பட்டன.
 
இவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, மனுதார்கள் தங்களது படிவம் எந்த நிலையில் உள்ளது என்பதை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளம் மூலம் தெரிந்து  கொள்ளலாம். மேலும், செல் எண் கொடுத்துள்ள மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.