வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 26 ஜனவரி 2015 (08:59 IST)

குடியரசு தினம்: தேசியக் கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் கே.ரோசய்யா

66 ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் காந்தி சிலை அருகே காலை 8 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா தேசியக்கொடியை ஏற்றினார்.
 
இன்று நாடு முழுவதும் 66 ஆவது குடியரசுத் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சரியாக காலை 8 மணிக்கு ஆளுநர் ரோசய்யா, காந்தி சிலை முன்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, காவல்துறை பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
 
அதனைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில காவல் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பு அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.
 
அதைத் தொடர்ந்து, வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங் களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய கவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.