Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி அதிரடி!

ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி அதிரடி!

செவ்வாய், 18 ஜூலை 2017 (13:17 IST)

Widgets Magazine

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மரணம் குறித்த விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இந்த 75 நாட்களும் ஜெயலலிதா எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
 
மேலும் ஜெயலலிதாவை சந்திக்க ஆளுநர் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது சிகிச்சை குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இருக்கவில்லை. மொத்தமும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் ஜெயலலிதாவின் மரணம் ஒரு மர்மமாகவே இருந்தது.
 
இதனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வந்தவாறே உள்ளது. இந்த சூழலில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை சந்திக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மரணத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கும் தொடர்பு உள்ளது என பல தகவல்கள் பரவின. இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் சிகிச்சை தரும் போது அதில் யாரும் தலையிடவில்லை. அவர்து சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குட்டை பாவடையுடன் வீடியோ வெளியிட்ட மாடல் அழகி: கைது உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள்

சவுதி அரேபியாவில் குலூத் என்ற மாடல் அழகி குட்டை பாவடை அணிந்து வீடியோவை வெளியிட்டதால் ...

news

காமத்தை அடக்க முடியாத வாலிபர்: 75 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து சென்று...?

சமீப காலமாக பல வாலிபர்கள் காம உணர்ச்சி பெருக்கால் பல முறையற்ற செயல்களை செய்கின்றனர். வயது ...

news

நான் சும்மா இருக்கப்போவதில்லை - பொங்கியெழுந்த டிஐஜி ரூபா

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவிடம், அக்ராஹார சிறையில் நடந்த விதிமீறல்கள் குறித்த சில ...

news

நைட்டியில் ஹாயாக வலம் வரும் சசிகலா: வெளியானது வீடியோ!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு ...

Widgets Magazine Widgets Magazine